நான்

உளமார
உறவுகளோடு இருக்க நினைத்து
ஒதுங்கி வந்த
ஒருவனின் வாழ்க்கை இது!!!

குடும்ப உறவுகளை,
குலமாக நினைத்து,
நிதியிழந்து,
நிற்கதியாக,
நிற்கின்றேன்!!!

உறவுகள் இழைத்த தவறுகளை,
உரிமையோடு கேட்க இயலாது,
தன்னை வருத்தி,
தனிமையில் இருக்கின்றேன்!!!!

பிடித்த வேலை கூட,
பிடிக்காதது போல்,
உதரிவிட்டதாக,
உணர்கின்றேன்,
உறவுகளை போல்!!

வருத்தத்தை கூட,
வெறுப்புடன் காட்டுவதால்,
காரணமின்றி,
கலங்குகின்றேன்!!!

விடையுள்ள,
வினாக்களுக்கு கூட,
விடையற்று நிறுகின்றேன்,
படையற்று நிற்க்கும்,
கர்ணனை போல்!!!

முன்கோபம் எனும்,
முரட்டு கர்வத்தால்,
முரண்பாடாக நிற்கின்றேன்,
முட்களோடு இருக்கும்,
மலரை போல்!!

முடிவு காண இயலாத,
முட்டாளாய் நிற்கின்றேன்,
உயிர் இல்லாத,
மரப்பாச்சி போல்!!!

கலப்படமற்று வாழ்வதால்,
கரை ஒதுங்கும் குப்பையாக
நிற்கின்றேன்!!!

நீந்தி செல்ல துணிவிருந்தும்,
நிற்கதியாக நிற்கின்றேன்,
நீர்க்காக காத்திருக்கும்,
பயிர் போல்!!!

இப்படிக்கு,
இவன்

#பிரபு

Comments

Popular Posts