பொய்

பொய்:

தன்னை காப்பாற்றிக்கொள்ள,
தன்னால் உருவாக்கப்பட்டது.
மறையக் கூடிய,
இன்பத்துடன்!!!

அறிந்த தருவாயில்,
அவமானத்துடன்,
துவண்டுபோக வைக்கிறது,
துன்பத்துடன்!!!

மன்னிப்பு கூட,
மரியாதை இழந்து,
உருகி நிற்கின்றது,
உறைந்த உள்ளத்துடன்!!!

மறைக்க பட்டதால்,
மறுக்கப்படுகின்றன,
உணர்ச்சியிழந்த,
உறவுகளுடன்!!!

காத்திருக்க,
காரணமாகிறது..
கவலையை ,
களைவதர்காக,
கனிவுடன்!!!

#பிரபு

Comments

Popular Posts