அறியா உலகம்

                                                        பகுதி - 3
     வெப்பத்தின் புரியா புதிருடன் தளர்வடைந்த கால்கள் நகருகின்றன.சோர்வின் உச்சிக்கு செல்லும் போது சல சல என அருவி ஓடும் சத்தம் அவனை ஆனந்த படுத்துகிறது .பருக நீர் கிடைத்து விட்டது என்ற உத்வேகத்துடன் அருவியின் ஓசை கேட்ட திசைக்கு வேகமாக நகருகிறான்..
   இது கனவா நினைவா என்ற சந்தேகம் அவன் வேகத்தை தாண்டி மனதில் உதிக்கிறது.இது கனவல்ல நிஜம் என்பதை அவன் கையில் ஏற்பட்ட மறையாத தழும்பு , தன் மனைவி நெருப்பால் இட்ட அன்பு முத்தம் சற்று நேரத்தில் உணர்த்தி விட்டது.
        அந்த நினைவுகளை எண்ணி பார்ப்பதற்குள்
திக்கு முக்காடி நீர் நிலையை அடைந்தான்.நீர் நிலையின் இரு ஓரங்களிலும் ஒரே மையான அமைதி.எந்த உயிரினத்தின் நடமாட்டமும் அதன் அருகில் இல்லை.நதியின் ஓசையை தவிர அவன் காதுகளுக்கு எவ்வித சத்தமும் கேட்கவில்லை.
   பசியின் கோரப்பிடியில் இருந்தவனுக்கு நிவாரணம் அளித்தது போல் காட்சியளித்தது அந்த நீர்நிலை.தன் கறைபடிந்த கைகளை சுத்தம் செய்து அந்த நீரை கையில் எடுத்து பருகுகிறான். படபடப்புடன் பாதி நீர் அருந்திய வுடன் நீரின் தன்மையில் மாற்றம் இருப்பது தெரிகிறது.
     கைகளை கூர்ந்து கவனித்தவன் ,தன்னை அறியாது மயங்கும் நிலைக்கு செல்வது போல் எண்ணமும் உடலும் வலிமை இழக்கிறது.அந்த நீரில்  உள்ள மர்மத்தை அறிய காத்திருங்கள்.

Comments

Popular Posts