அறியா உலகம்

                                       பகுதி - 4

        தான் அருந்திய நீர் அதிக உப்புத்தன்மையுடன் இருந்தது.தன்னை செயலிழக்க செய்யும் அளவிற்கு அதனுடைய உவர்ப்பு சுவை அமைந்தது.அதோடு மட்டுமல்லாது நீரில் இரத்த வாடையும் அடித்தது. அதனால் ஆடி போய் செய்வதறியாது நிற்கின்றான்.

        அருகில் இருந்த மரத்துண்டை எடுத்து ஆற்றில் கிளரும்படி செய்கின்றான். ஆற்றில் உள்ள உயிரினங்கள் உயிரற்று மிதந்து வருவதை காண்கின்றான்.

         இவை எதனால் நேர்ந்தது. நீரின் தன்மை மாறக்கூடிய காரணம் என்ன..நீர்வாழ் உயிரினங்கள் இறக்க எவ்வாறு நேர்ந்தது .தண்ணீர் முழுவதும் சிகப்பாக மாற காரணம் என்னவோ என்ற வினாக்கள் அவன் மனதில் தொற்றிக்கொண்டது.

     பொதி சுமக்கும் கழுதை போல விடை தெரியாத வினாக்களுடன் நகரத் தொடங்குகின்றான் அந்த நதிக்கரை ஓரத்தில்..தன் நிலையை எண்ணி அவன் கண்கள் கலங்கி ஆற்றின் நீரின் தன்மையை போல் உவர்ப்பாக இரத்தம் போல் இரு கண்களிலும் வழிய தொடங்குகிறது கண்ணீர்..

     கால்நடையாக நடந்து ,இளைப்பாற உணவின்றி இறுதி நாட்கள் நெருங்குவதாக எண்ணி ஆற்றின் கரையோர ஈர மண்ணில் மயங்கி விழுந்தான்.நீரின் ஓட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்குகிறது.

Comments

Popular Posts