அறியா உலகம்
பகுதி - 6
வெளியில் குளிரும்
குகைக்குள் வெப்பமுமாக ,அவனை
குளிர் காய செய்யகின்றது
குகையின் சீதோஷனநிலை..
எதிரில் உள்ள,
எதிர்பில்லா வழிப்பதையை,
எல்லையாக
எண்ணி கடக்க நினைக்கிறான்.
கண் தெரியாத இருட்டில்,
காரிருளுக்கு மத்தியில்,
கால்களில்
தட்டுப்படுகின்றன
தலையில்லா உடல்கள்.
தன்னிலை அறியாது,
தவிப்பை முன்னிறுத்தி,
தடையத்தை தேடுவது போல்,
இறந்த உடலின்
இரத்த வாடையுடன்,
இயல்பை மறந்து,
யார் என்று தெரிய முனைகிறது அவன் கைகள்.
கைகளில் தட்டுப்படுகின்றது,
கைகடக்கமான புத்தகம்.
அதனுள் இறந்தவனின்
முகத்திரையும்
முத்தான வார்த்தைகளும்.
அந்த வார்த்தைகள்,
இப்புத்தகத்தை படித்தால்,
இயல்பாக மாறிவிடும்,
உன் வாழ்க்கை.
சந்தோசம் கலந்த,
சறுக்களுடன்,
முதல் பக்கத்தை திறந்தவனுக்கு
முற்றிலும்
எதிர்பாராத
எண்ணங்கள் எழுகின்றன.
ஏனென்றால் அது அவனுடைய கைப்புத்தகம்..
சற்று
சங்கடத்துடன்,
கீழ் உள்ள பிணத்தை,
புரட்டி பார்த்து,
புண்பட்டு நிற்கின்றான்.
இதிலிருந்த
இறந்த உடல்களில் ஒன்று,
அவன் மனைவியோடது.
அதை அவள்
கைகளில் இருந்த,
இவனால் போடப்பட்ட,
மோதிரம் சுற்றிக்காட்டியது.
மோதிரத்தை கழற்றி, தன்
மோதிர விரலில் மட்டினான்,
அவள் நினைவுக்காக.
தன் மனைவியின்,
இந்த நிலை அவனை,
இன்னும் சோர்வடைய செய்கிறது.
சோர்வை காட்டாது,
சோகம். அறியாது போல்,
முன்னேறுகின்றன
அவன் கால்கள்,
கலங்கிய கண்களுடன்..
கரைபுரண்டு ஓடும் வெள்ளம் போல்
கண்களின் கண்ணீர் என்னும் வெள்ளம்
அவனிலிருந்து ஓடத் தொடங்கியது..
சற்று தூரம் செல்ல செல்ல,
சாலை தெரிவது போல்,
சாதாரணமாக தோன்றியது,
குகையில் இருந்து,
குருதி படிய,
அவனது கடைசி அடி,
அவன் மனைவியின் தலை மேல்.
வெறும் சகதி என நினைத்து..
வெளி உலகம் வருகிறான்.
NICE DEAR
ReplyDelete