தனிமை

தனிமை:

அனைவரும் உணரும்,
அற்புதமான நிகழ்வு!!!

உன்னையே,
உனக்கு,
அடையாளம் காட்டும்,
அறுமருந்து!!!

விரும்பியவர்,
விட்டுச்செல்லும் போது,
உன்னை அறியாது,
உன்னில் ஏற்படும்,
உணர்வு!!!

மகிழ்ச்சியிலும்,
மறையாது தோன்றும்,
பிம்பத்தின்,
பிரதிபலிப்பு!!!!

தன்னை,
தவிப்படைய செய்யும்,
உள்ளத்தின்,
உணர்வுபூர்வமான,
வெளிப்பாடு!!!

தன்னம்பிக்கையை,
உன்னில் செலுத்தும்,
உந்து சக்தியின்,
மறு உருவம்!!!

கூட்டத்திலும்,
கூர்மையான ஆணியை போல்,
பிரித்து காட்டும்,
உரித்தான,
அடையாளம்!!!

தவத்தில் மட்டுமல்ல,
பாவத்திலும்,
உன்னால் மட்டுமே,
உணரப்படும்,
உன்னத,
உணர்வு!!!!

#பிரபு

Comments

Popular Posts