நட்பு

நட்பு:
அறிமுகம் இல்லாமல்,
அறிமுகப்பகிடுத்தி,
சூழ்நிலை என்னும்,
சூழ்ச்சியின் மூலம்,
பிரிய வைக்கிறது,
பிரியா விடையுடன்!!!
அருகில் இல்லாத போது தான்,
அறிய வைக்கிறது,
தனிமை என்னும்,
தவிப்பை!!!
துரோகம் என்னும்,
துர்பாக்கியத்தால்,
துவண்டு விடுகின்றன, சில
துளிர் விட்ட நட்புகள்!!!
காதல் என்னும் ,
கற்றை போல் ஒத்துக்கப்படுகின்றன,
சில நேரங்களில்,
சிறு தூசியை போல!!!
உயிரை கூட,
உரிமையாக குடுக்க தோன்றும்,
நண்பன் என்னும்,
நான்கெழுத்திர்காக!!!!
வாழ்க்கை என்னும்,
வானத்தில்,
நிலா என்னும்,
நினைவை போல,
மறைந்து மறைந்து
தோன்றுகிறது,
மறைக்க முடியாத நண்பர்களின்,
மறையாத நினைவுகள்!!!
நினைவுகள் என்னும்,
நிஜத்தை கொடுத்து,
தொலைவில் கூட இல்லாமல்,
தொலைந்து செல்கின்றன,
மரணத்தினால்!!!
இவ்வாறு
நகர்ந்துக் கொண்டிருக்கிறது,
நம்முடைய வாழ்வு,
நண்பர்கள் மத்தியில்!!!
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
#பிரபு

Comments

Popular Posts