அறியா உலகம்
பகுதி - 1
அந்த இரவு நேரத்தில் எங்கிருக்கிறோம் என்பதை அறியாதது போல் உணர்கிறான்.சுற்றும்.முற்றும் பார்த்தபின் அதை முடிவு செய்கிறான்.தான் ஏதோ பெரிய ஆபத்தில் இருப்பதாக..செய்வதறியாது பார்த்தவனுக்கு ஒரு அதிர்ச்சி.அவன் நான்கு நீர் நிலைக்கு இடையே ஏதோ தீவில் இருப்பது போல் உள்ளுணர்வு உணர்த்துகிறது.
இதை எல்லாம் பார்த்த பிறகு சற்று கூர்மையாக சிந்திக்க தொடங்குகிறான்.நீர் நிலைகளுக்கு அருகில் சென்று பார்க்கிறான்.அவனால் நீரின் தன்மையை உணர முடியவில்லை.இப்பொழுது தான் அவனுக்கு ஒரு உண்மை தெரிய வந்தது தான் கண்டது கானல் நீர் என்று.
பகல் நேரத்தில் தெரிய கூடிய கானல்நீர் ஏன் இரவில் தெரிந்தது எண்ணி அதிர்ச்சியாக இருந்தாலும் சுதாரித்து கொண்டு. இவ்விடத்தை விட்டு வெளியேற நினைக்கிறான். இப்பொழுது அவனுக்கு இரண்டு எண்ண ஓட்டங்கள் மனதில் தோன்றுகின்றன.
ஒன்று இவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்.இல்லை எவ்வாறு இங்கு வந்தோம் என்று கண்டு பிடிக்க வேண்டும்.அவன் எப்படியாவது வெளியேற வேண்டும் என்ற முடிவில் ஒருமனதாக இருக்கிறான்.எவ்வாறு வெளியேற என்று அவனுக்கு ஒரு வழியும் கிடைக்கவில்லை.
தன்னில் உள்ள ஆடம்பர பொருள்கள் இருக்கின்றன்னவா என தேடி பார்கின்றான்.
தன் கைபேசி, கைக்கடிகாரம், மோதிரம் கழுத்து சங்கிலி எதையும் காணோம்.தன் உடைமைகள் கொள்ளையடிக்க பட்டனவா என்ற எண்ணமும் தோன்ற தொடங்கியது.
கொள்ளையடிக்கப்பட்டால் தன்னை ஏன் உயிரோடு விட வேண்டும் என்று சிந்தனை வேறு வழியில் செல்ல தொடங்கும் போது கொலுசு சத்தம் ஒன்று அவ்வப்போது கேட்டு பீதியடைய செய்கிறது.
இவையனைத்திர்கும் சூரிய உதயத்தின் மூலம் விடை கிடைக்கும் என்ற எண்ணம் மெதுவாக அவனுக்கு தோன்றுகிறது.
தற்போது இளைப்பாற ஒரு இடத்தை தேடுகிறான்.அவன் இருந்த இடத்தை சுற்றி பார்த்தால் மரங்களும் சிறு உயிரினங்களும் இருந்தது.அவன் இரவு.முடிந்ததும் விடை கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சற்று துன்பம் கலந்த இன்பத்துடன் கூடாரம் அமைக்க எண்ணுகிறான்.
தரையில் ஒரே சகதி. மரங்கள் அனைத்தும் ஈரமான தோணியில் இருந்தது..அதனால் மரத்தின் கிளைகளை பயன்படுத்த.முடியவில்லை.கூடாரம் அமைக்க முடியாத விரக்தியில் தொலைவில் இருக்கும் மாமிச உயிரனாகளிடமிருந்தாவது தப்பிக்க சகதியை பூசிக்கொண்டு சூரியனின் வருகைக்காக காத்திருக்கிறான்..
நல்ல தொடக்கம்...
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteGood
ReplyDeleteநன்றி சகோ
DeleteEthuku dai ?????
Delete