அறியா உலகம்
அறியா உலகம்
பகுதி 2
பல அதிர்ச்சிகள் காத்திருப்பதை அறியாமல் சூரியனின் உதயதிர்காக கத்திருக்கிறான். பல நாளிகைகள் கழித்தும் சூரியனின் உதயத்திர்கான
அறிகுறிகள் தென்படவில்லை.அவனுள் இன்னும் பட படப்பு அதிகரித்தது. நேரத்தை செலவு செய்யவது வீண் என அறிந்து உடனே இவ்விடத்தை விட்டு வெளியேற முயல்கிறான்..
தன் கை மற்றும் கால்களை நகர்த்த.முடியாததை உணர்கிறான்.அவையிரண்டும் கட்டப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. கூர்ந்து கவனித்தவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது.நஞ்சு நிறைந்த இரு கொடிய நாகங்கள் தன் உடலை நகர விடாமல் படர்ந்திருப்பது தெரிகிறது.பயம் ஒரு புறம் இருக்க பசியும் வாட்டி வதைக்க தொடங்குகின்றது.
நாகங்களின் சீண்டுதலில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள எண்ணியவன் உயிரில்லா சிலையை போல ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் இருக்கிறான்.நாகங்கள் சிறிது நேரத்தில் மெல்ல பிடியை தளர்த்தி நகர தொடங்குகின்றன.கண்ணிற்க்கு எட்டிய தூரம் வரை வேறு எந்த உயிரினமும் தெரியவில்லை.
எழுந்து அவ்விடத்தை விட்டு நகர தொடங்குகின்றன அவன் கால்கள்.வினாவே இல்லாமல் விடையை தேடுவது போல் மனதில் ஒரு சலசலப்பு.நகர நகர அவனால் அதிக வெப்பத்தை உணர முடிகிறது.கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுகிறது வெப்பத்தை தாங்க முடியாமல்...
இவ்விடம் ஏதோ விபத்துக்கு உள்ளாகிர்ப்பதாக இப்போது அவனால் அறிய முடிகிறது.தற்போது தன்னை சுற்றி உள்ள சூழ்நிலைகளை ஆராய தீர்மானித்து, அருகில் உள்ள மரத்தை தொட்டு பார்த்தவனுக்கு அதிர்ச்சி..அந்த மரம் வெப்பத்தால் நெருப்புக்கு இரையாகி தன் உயிரை மாய்த்து உஷ்ணத்தை வெளியிட்டு கொண்டிருந்தது..
அனைத்து மரம் செடி கொடிகளிலும் இதே நிலமை. இதனால் தான் வெப்பத்தை உணர.முடிந்தது என்று உறுதி செய்கிறான்.வெயில் வாராத இவ்விடத்தில் நெருப்பு எவ்வாறு உருவாகும் என்ற கேள்வியுடன்.பயணத்தை தொடருகிறான்..
பயணம் தொடரும்.....
Superb but yennamo miss aguthu
ReplyDeleteNext part la add pannuren bro
Delete