ஏக்கம்

சிரித்து பேசும்,
     உந்தன் அருகில்
சிக்கி தவிக்கும்,
     எந்தன் வார்த்தைகளும்!!!

நகைப்பதை மட்டும்
     உரிமையாக கொண்டு     ‎
நகர்ந்துக் கொண்டிருக்கும், 
‎     எந்தன் உரையாடல்களும்!!!

காலத்தின் மாற்றதிற்காக,
    கானல் நீரை போல்
காத்திருக்கும் எந்தன்
     கனவுகளும்!!!!

களைந்து விடுமோ,
     என்ற ஏக்கத்தில்,
கவி பாடுகின்றன,
     கவிதை என்ற வடிவில்!!!

#பிரபு

Comments

Popular Posts