அம்மா
*அம்மா*
அன்பு என்ற ஒன்றை
அறிமுக படுத்துகிறாள்
அவளுக்குள் உண்டான
உன்னதமான,
உயிருக்காக !!!!
பாசம் என்ற ஒன்றை
பாசாங்கு இல்லாமல்
பரிவர்த்தனையுடன்
பகிர்ந்து அளிக்கிறாள், தன்
குழந்தைகளுக்காக !!!!
துன்பம் என்ற ஒன்றை
துளி அளவும் காட்டாமல்
இன்பத்துடன் இருப்பதாய்
இயல்பாய் காட்டுகிறாள்,
பிள்ளைகளின்
பொறுமைக்காக !!!!
கோபம் என்ற ஒன்றை
போலியான
புன்னகைக்குள்
புதைத்துவிட்டு
அன்பு செய்கிறாள் என்னுடைய
ஆறுத்தலுக்காக !!!!
பிரிவு என்ற ஒன்றை
புரிய கூடாது
என்பதற்க்காக
என்னுடனே வருகிறாள்
என் துணைக்காக !!!!
அனைத்தையும்
அன்று தன் உணருகிறேன்
அவள் மறைவுக்கு பின்
சிவந்த கண்களுடனும்,
வழிந்து கொண்டிருக்கும்
கண்ணீருடனும் !!!!
#பிரபு
Comments
Post a Comment